சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எந்த விஷயத்தையும் கொஞ்சம் தள்ளி போடுவது நல்லது. தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். பொருளாதார நிலை தேவைக்கேற்ப இருக்கும். உங்கள் பேச்சால் அனைத்தையும் சாதிக்க முடியும். வீண்வாக்குவாதத்தை தவிர்க்கவும்.உடன் பிறப்புகளிடம் மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடை இருப்பினும் விடாமுயற்சியால் மட்டுமே வெற்றி பெற இயலும். வீடு, வாகனம் தொடர்பான பிரச்னைகள் உருவாகும். எதிரிகளால் பிரச்னை வந்தாலும் இறுதியில் காணாமல் போவர். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. விலகி நின்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவர். குடும்பத்தில் பழைய அமைதி திரும்பும். உங்கள் பேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மை இருக்கும். நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். வெளியில் கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெற முடியும். ஒரு சிலருக்கு வாடகை வீடு பிரச்சனைகள் தீரும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். உத்யோகத்தில் தடைகள் நீங்கி ஆதாயங்களை பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் ஏற்ற நிலை உருவாகும்.
சந்திராஷ்டமம் : 7,8,9 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com